அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை சட்டவிரோதமாக அறிவித்து, அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாபதியானது முதல் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதில் மிக முக்கியமாக பார்க்கபப்டுவது , அவர் தற்போது வர்த்தகப் போரில் இறங்கி இருப்பதுதான்..
இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து உள்ளார்..
அதில் குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரியை அண்மையில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது உலக நாடுகளிடயே பேசும்பொருள்ளாகி உள்ளது..
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால் இப்படிதான் வரிகளை உயர்த்துவேன் என்று ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவுக்கு நேரடியாகவே அறிககையும் விட்டிருந்தார்..
இந்நிலையில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசரகால அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த வரி விதிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்..
அதில், " இந்த தீர்ப்பு நாட்டிற்கு முழுமையான பேரழிவாக" இருக்கும் என்று கூறினார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டவர், “ இந்த தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது" என்று தாக்கி எழுதினார். N
மலும் உச்ச நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்குமாறு வலியுறுத்தினார். "இந்த வரிகள் எப்போதாவது நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும்" என்று டிரம்ப் தனது பதிவில் எழுதினார். "இதை நிலைநிறுத்த அனுமதித்தால், இந்த முடிவு உண்மையில் அமெரிக்காவை அழித்துவிடும்." என்றும் குறிப்பிட்டிருந்தார்..